சர்வதேச புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார் (Video)

உலகப் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவுக்கு இந்திய திரையுலகp பிரபலங்களும் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கட்கிழமை (டிசம்பர் 23) காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி நீரா பெனகல், மகள் பியா ஆகியோரை அவர் விட்டுச்சென்றுள்ளார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஷியாம் பெனகல் 1970களில் சமூக உணர்வுடன் கூடிய இந்தியத் திரைப்படத்தின் புதிய அலையை முன்னெடுத்த பெருமைக்குரியவர்.

அவரது படைப்புகளான அங்குர் (1974), நிஷாந்த் (1975), மந்தன் (1976), பூமிகா (1977) ஆகியவை சமூக யதார்த்தங்களை எடுத்துரைத்தன. இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இந்தியாவின் பிளவுகளை ஆராய்ந்த ‘அங்கூர்’ படம் அமைந்தது.

இவர் அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட ஏழு படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றவர்.

Leave A Reply

Your email address will not be published.