சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட இரத்தினக் கற்களோடு இருவர் கைது .
ஏழு மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட மிக அரிய வகை இரத்தினக் கற்கள் இருவர் கட்டான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களுடன் அவர்கள் பயணித்த வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பன்னல மற்றும் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா விமானப்படையின் புலனாய்வு அதிகாரிகளின் கண்காணிப்பு ஆதரவு இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பணக்காரர்களை குறிவைத்து இந்த நகைகளை விற்க அவர்கள் தயாராக இருந்தனர், இது எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகநபர்கள் கட்டானைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.