ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாக கூறி 410 ஊழியர்கள் பணிநீக்கம்!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாக கூறி 410 ஊழியர்களை மாநில அரசின் ஃபைபர்நெட் நிறுவனம் நிரந்தர பணிநீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து ஆந்திரபிரதேச ஃபைர்நெட் நிறுவனத்தின் (ஏபிஎப்சி) தலைவர் ஜி.வி.ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முந்தைய ஜெகன் அரசு எவ்வித தகுதியும் இல்லாத 410 ஊழியர்களை இந்த ஃபைபர் நெட் நிறுவனத்தில் சட்டவிரோதமாக நியமனம் செய்துள்ளது. இவர்கள் இங்கு பணி நியமனம் பெற்று, ஜெகன் கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்கள் வீடுகளில் பணி செய்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு இங்கிருந்து மாதந்தோறும் பல லட்சம் ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் 410 பேரையும் நாங்கள் நிரந்தர பணிநீக்கம் செய்கிறோம். இவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அளித்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலமாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு கூட கடந்த அரசு சார்பில் ரூ.1.15 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் 15 நாட்களுக்குள் திரும்ப செலுத்துமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அவர் செலுத்த தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜி.வி.ரெட்டி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.