கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது .
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 67 பேருடன் கஜகஸ்தானில் சற்றுமுன் விபத்துக்குள்ளானது.
பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று இன்று(25/12/25) புதன்கிழமை கஜகஸ்தானின் அக்டாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்ச்சி செய்யும் போது இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என கஜகஸ்தானின் அவசரகால மீட்பு குழு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் 62 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் உட்பட 67 பேர் இருந்ததாக கசாக் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 25 பேர் காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ், எம்ப்ரேயர்190 என்ற J2-8243 எண் கொண்ட அந்த விமானம், பாகுவிலிருந்து ரஷ்யாவின் செச்சினியாவின் தலைநகரான க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது, ஆனால் கசாக் நகரத்திலிருந்து சுமார் 3 கிமீ (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது
கஜகஸ்தானில் உள்ள அதிகாரிகள் விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பறவை மோதியதில் விமானத்தை அவசர தரையிறக்கத்தை விமானி தேர்வு செய்ததாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன என்று ரஷ்யாவின் விமான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. க்ரோஸ்னியில் கடும் மூடுபனி காரணமாக விமானம் அக்டோவுக்கு திருப்பி விடப்பட்டதை கஜகஸ்தானின் அவசர அமைச்சகம் உறுதிப்படுத்தியது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இந்த விமானம், விபத்துக்கு முன் விமான நிலையத்தை பலமுறை வட்டமிட்டது. அந்த இடத்தில் ஏற்பட்ட தீயை விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பணியாளர்கள் அணைத்து வருவதாக அந்நாட்டின் அவசரகால மீட்பு குழு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துயரமான விபத்தின் மனதை கனக்கச் செய்யும் முழுமையான வீடியோவின்