கரை ஒதுங்கிய படகு போதைப் பொருள் கடத்தல் படகா என சந்தேகம்?
யாழ் வடமராட்சி கிழக்கு கடற்கரைக்கு , ஆளில்லா படகு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இயந்திரமும் இல்லாத OFRP-6224JFN என்ற பதிவெண் கொண்ட இந்த படகு , இந்திய படகாக இருக்கலாம் என யாழ்ப்பாண மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.
படகில் இருந்து யாராவது வந்து ஆபத்தில் சிக்கியுள்ளார்களா என்பதை அறியுமாறு மீனவர்கள் பருத்திதுறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதோடு, இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகமும் கடற்படைக்கு அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடத்தல்காரர்கள் படகு மூலம் சட்டவிரோதமான பொருட்களை ஏற்றிச் வந்து , கடற்படையினரைக் கண்டதும் தப்பிச் சென்றிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.