பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 46 பேர் பலி.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாநிலத்தின் பர்மால் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள 4 பகுதிகளை குறிவைத்து கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலை கண்டிப்பதாக தலிபான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. வான் தாக்குதலில் பல தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில், தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவம் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர், மேலும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.