எந்தவொரு அரசியல் திட்டத்திற்கும் எந்த வகையிலும் பங்களிக்கப் போவதில்லை.
எந்தவொரு அரசியல் திட்டத்திற்கும் எந்த வகையிலும் பங்களிக்கப் போவதில்லை என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய ஆகிய கட்சிகளின் இணைப்புக்கு கரு ஜயசூரியவை மத்தியஸ்தம் செய்ய குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதன் மூலம் இலங்கை சமூகத்தின் எழுச்சிக்கான அர்ப்பணிப்பைத் தவிர, அதிகார அரசியல் திட்டங்களுக்கு எந்த வகையிலும் பங்களிக்க மாட்டேன் என்று அவர் கூறுகிறார்.
நாட்டின் மீது அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு குடிமகன் என்ற வகையில், எந்த விதமான பங்கேற்பாளராகவோ அல்லது ஒரு சக்திவாய்ந்த அரசியல் முகாமின் ஆதரவாளராகவோ செயல்பட முன்வராவிட்டாலும், பொது நலனுக்காக தனது அதிகபட்ச அர்ப்பணிப்பைச் செய்வதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறுகின்றார் .