முரளிதரனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த டீஜே !
விஜய் சேதுபதி நடிப்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரான முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக ‘800’ என்ற பெயரில் உருவாக உள்ளது.
எனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் உள்ளது.
அப்படியிருக்க இந்தப்படத்தில் முரளிதரனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷின் அசுரன் படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய டீஜே அருணாச்சலத்தை இயக்குனர் அணுகியுள்ளதாக தெரிகிறது.
ஆனால் அருணாச்சலம் “இந்தப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் இருக்கப் போவதால், என்னுடைய தாய் ஈழத்தை சேர்ந்தவர்.
எனவே ஈழத்தமிழர்களின் போரின் போது வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பல கொடுமைகள் நடந்துள்ளதால், இந்த அரசியலில் நான் ஈடுபட விரும்பவில்லை” என படத்தில் நடிக்க மறுத்துள்ளார் அசுரன் பட நடிகர் டீஜே அருணாச்சலம்.
இவருடைய இந்த கருத்தால் ரசிகர்கள், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்காத முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதியும் நடிக்க கூடாது என்பதை போன்ற கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.