குறைந்த செலவில் கொண்டாடப்படவுள்ள, 77வது சுதந்திர தினம்!

77வது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் கொண்டாட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் விழாவில் பங்கேற்கும் அழைக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கை 3000 இல் இருந்து 1600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு விழாவில் ஜனாதிபதிக்கு 21 மரியாதை குண்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

முப்படை மற்றும் பொலிஸ் மரியாதை அணிவகுப்பில் பங்குபற்றும் படையினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

இராணுவ அணிவகுப்பின் போது கவச வாகனங்களை காட்சிப்படுத்துவதும் இந்த ஆண்டு சுதந்திர நினைவேந்தலில் செய்யப்பட மாட்டாது.

விமானக் காட்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வருட சுதந்திர நினைவேந்தல் அடுத்த மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.