ஜார்க்கண்ட் மாநிலத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் 3 பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் 3 பள்ளிக்குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.

ராம்கார் மாவட்டத்தின் மதுவாடண்ட் கிராமத்திற்கு அருகில் இன்று (ஜன.8) காலை பள்ளிக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது, எதிரே உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி மீது அந்த ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால், அந்த லாரி சாய்வாகக் கவிழ்ந்ததுடன் அந்த ஆட்டோவின் ஓட்டுநர் உள்பட 3 பள்ளிக்குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். மேலும், அந்த ஆட்டோவில் பயணம் செய்த 4 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள சர்தார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் ஒரு மாணவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதினால் அவரை தலைநகர் ராஞ்சியிலுள்ள உயர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

முன்னதாக, அம்மாநிலத்தில் நிலவும் குளிரலையால் அம்மாவட்டத்தின் பள்ளிக்கூடங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாணவர்கள் பயிலும் தனியார் பள்ளி மட்டும் சட்டவிரோதமாக இன்று (ஜன.8) இயங்கியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக்குழந்தைகள் பலியானதினாலும் பள்ளிக்கூடத்தின் அலட்சியப்போக்கையும் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை 23 ஐ முடக்கி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.