பிணையாளி ஒருவரின் உடலை மீட்ட இஸ்ரேல்
காஸாவிலிருந்து பிணையாளி ஒருவரின் உடலை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ராஃபாவில் (Rafah) உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து யூஸெஃப் அல் – ஸயாத்னா (Youssef al-Zayadna) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிக்கலான, சிரமமான சிறப்பு நடவடிக்கையின் மூலம் பிணையாளியின் உடல் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் சொன்னது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலின் Holit வட்டாரத்திலுள்ள வீட்டிலிருந்து ஸயாத்னாவும் அவருடைய மகனும் கடத்திச் செல்லப்பட்டனர்.
வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராகத் திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) பதவியேற்கவிருக்கிறார்.
அதற்குள் பிணையாளிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று திரு டிரம்ப் எச்சரித்திருந்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) போர் நிறுத்த உடன்பாடு குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகளின் சமரச முயற்சியில் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்றார் அவர்.