முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் நல்லுடல்… இறுதி மரியாதைக்காக நாடாளுமன்றக் கட்டடத்தில்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் (Jimmy Carter) நல்லுடல் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 39ஆவது அதிபரான திரு கார்ட்டர் 1977ஆம் ஆண்டிலிருந்து 1981ஆம் ஆண்டுவரை அந்தப் பொறுப்பிலிருந்தார்.
திரு கார்ட்டர் 100ஆவது வயதில் சென்ற மாதம் (டிசம்பர்) 29ஆம் தேதி காலமானார்.
அவருடைய நல்லுடல் பேழை அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரு கார்ட்டரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தலாம்.
நல்லடக்கத்துக்காகத் திரு கார்ட்டரின் நல்லுடல் மீண்டும் ஜார்ஜியா (Georgia) எடுத்துச்செல்லப்படும் முன் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) புகழஞ்சலி உரை நிகழ்த்துவார்.