அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – ஐவர் மரணம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் (Los Angeles) காட்டுத் தீ வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐவர் மாண்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுமானங்கள் தீயில் கருகிப் போயின.
நெருப்பை அணைக்கத் தேவையான தண்ணீருக்குத் தட்டுப்பாடு நீடிக்கிறது.
மக்கள் தண்ணீரைச் சிக்கனமாய்ப் பயன்படுத்தும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சுமார் 37,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலிஸில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கூறியுள்ளார்.