முன்னாள் அமெரிக்க அதிபர் கார்ட்டருக்குப் பைடன் புகழஞ்சலி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் (Jimmy Carter) நல்லுடல் இறுதிச் சடங்குக்காக அவருடைய சொந்த ஊரான ஜார்ஜியாவுக்கு (Georgia) எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் அவருடைய உடலுக்கு அரசாங்க மரியாதை வழங்கப்பட்டது.
அதிபர் ஜோ பைடன் (Joe Biden), புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப் (Donald Trump), முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா (Barack Obama), ஜார்ஜ் W. புஷ் (George W. Bush), பில் கிளிண்டன் (Bill Clinton) உள்ளிட்டோர் கார்ட்டருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பைடன் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். சக்திவாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்திய திரு கார்ட்டர், அதிபர் பொறுப்புக்குப் பிறகு முன்மாதிரியைத் தோற்றுவித்ததாக பைடன் கூறினார்.
1977 இலிருந்து 1981 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த கார்ட்டர் சென்ற மாதம் (டிசம்பர்) 29 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 100.