நான் 50 கோடி கொடுத்தேனே.. தேசிய பட்டியல் எம்.பி. பதவி எங்கே..’ மில் முதலாளி கட்சி அலுவலகத்தில் நுழைந்து ரகளை!

‘சமீபத்தில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்திற்குள் கோபாவேசமாக நுழைந்த ஒரு முக்கிய அரிசி ஆலை உரிமையாளர் , அரசியல் கட்சியின் அலுவலகத்தில் ரகளை செய்து, அங்கு இருந்தோரை சபித்த சம்பவம் பலரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காகவும், பொதுத் தேர்தலுக்காகவும் கட்சிக்காக சுமார் 500 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

அந்தப் பணம் கட்சித் தலைவருக்கும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒருவருக்கும் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், வாக்குறுதியளித்தபடி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று அவர் வருத்தப்பட்டே ரகளை செய்துள்ளார் .

இது தொடர்பாக கட்சித் தலைமையிடமும், பணம் வழங்கியவர்களிடமும் பேசுமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.