டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் பங்கேற்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டோனல்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி அதிபராக அதிகாரபூர்வமாகப் பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள ஜெய்சங்கர், டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டங்களை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்துவார் என முன்னுரைக்கப்படுகிறது. குறிப்பாக, ஹெச் 1பி விசா தொடர்பாக முக்கிய ஆலோசனை நடக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் இந்தியர்கள் ஹெச் 1பி விசா மூலம் அதிகம் பலன் பெறுகின்றனர். இதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கட்சியில் இருந்தே குரல்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.