அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் நவீன் பலி!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் நவீன் பலியானார்.
பொங்கல் பண்டிகையன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் களமாடும்போது, காளை நெஞ்சில் முட்டியதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜாஜி அரசு மருத்துவமனையில் நவீன் பலியானார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 28 பேருக்குமேல் காயம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் படுகாயமடைந்த 5 பேருக்குமேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.