ரஷ்ய உக்ரைன் போரில் கேரளத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

ரஷியாவின் போரில் கேரளத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர் பலியாகி விட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தியது.

உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த மற்றொருவரும் காயமடைந்த நிலையில், மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் இருவரின் பெயர்களும் வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவில் உள்ள மீதமுள்ள இந்தியர்களையும் விடுவிக்குமாறு ரஷியாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், உயிரிழந்தவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தது.

காயமடைந்த நபரையும் சிகிச்சையின் பின்னர், இந்தியாவுக்கு திரும்பி அனுப்ப கோரியுள்ளதாகவும் கூறியது.

Leave A Reply

Your email address will not be published.