மருத்துவமனையில் Saif Ali Khan நலம்.
கத்தியால் 6 முறை குத்தப்பட்ட பாலிவுட் நடிகர் சய்ஃப் அலி கான் (Saif Ali Khan) சீரான நிலையில் உள்ளதாக அவரின் நிர்வாகக் குழு கூறியுள்ளது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் நடிகர் தற்போது குணமடைவதாக அது சொன்னது. இந்து நாளேடு அது பற்றித் தகவல் தந்தது.(16 ஜனவரி) அதிகாலை நடிகரின் மும்பை வீட்டில் கொள்ளை முயற்சி நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சய்ஃப் அலி கானுடைய இளைய மகனின் அறையில் சந்தேக நபர் இருந்ததாகவும் அப்போது ஊழியர் ஒருவரைச் சந்தேக நபர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதில் குறுக்கிட்ட நடிகரைச் சந்தேக நபர் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. 6 இடங்களில் காயமுற்ற நடிகருக்குப் பின்னர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை தொடர்கிறது. நடிகரின் வீட்டில் வேலைசெய்யும் ஒருவருக்குச் சந்தேக நபரைத் தெரிந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.