செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்த இந்தியா.
இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. அவ்வாறு செய்யும் நாலாவது நாடு அது.
விண்வெளி நிலையத்தை உருவாக்குவது, செயற்கைக்கோள்களைப் பழுதுபார்ப்பது போன்ற பணிகளில் செயற்கைக்கோள்கள் இணைக்கப்படுவது அவசியம்.
அதைச் சாத்தியமாக்கிய இந்தியா அதன் விண்வெளித் திட்டங்களில் முன்னேறியுள்ளதாகச் சொன்னது. செயற்கைக்கோள்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உந்துகணை வழி கடந்த மாதம் 30ஆம் தேதி விண்வெளிக்கு ஒன்றாகப் பாய்ச்சப்பட்டன.
பின்னர் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைப்பதற்கு ஆய்வாளர்கள் முயற்சி செய்தனர். முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும் அது இன்று சாத்தியமானது.