‘பொடி லெசி’ இந்தியாவின் மும்பையில் கைது ! சலிந்து இலங்கையை விட்டு தப்பினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெசி’ இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார் என இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜனித் மதுசங்க என்ற ‘பொடி லெசி’ இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாக கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வௌியாகி வந்தன.
பொடி லெசிக்கு பிணை வழங்கப்பட்டதாகவும், ஆனால் அடுத்த நீதிமன்ற திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பிணை நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற பொடி லெசி , இந்தியாவின் மும்பையில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சலிந்து இலங்கையை விட்டு தப்பினார் …..
அதே சமயம் திட்டமிட்ட குற்றப் பொறுப்பாளரான செல்லபெருமகே மல்ஷிகா குணரத்ன அல்லது சலிந்து, , இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, அவரைப் பிடித்து தருமாறு இந்திய பாதுகாப்புப் படையினருக்கு , இலங்கை பொலிஸாரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.