ஜனாதிபதி, அடுத்தபடியாக அமெரிக்காவிற்கு… பின்னர் ஜப்பானுக்கு…
ஜனாதிபதி அனுர திசாநாயக்க தனது அடுத்த வெளிநாட்டு பயணமாக அமெரிக்காவுக்குப் புறப்படுவார் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா கூறுகிறார்.
பின்னர் ஜனாதிபதி ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், பிராந்திய சக்திகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு ஜனாதிபதி சென்றதாகவும், உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணங்கள் அமைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.