கொழும்பு துறைமுகத்திற்குள் ஒருவர் விபத்தால் மரணம்!
கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள மின்விளக்கு கோபுரத்தின் ஒரு பகுதி திடீரென தலையில் விழுந்தமையால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.