காஸா போர் நிறுத்தம் தொடங்கியது.
காஸா போர்நிறுத்தம் கிட்டத்தட்ட 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு தொடங்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) ஹமாஸ் கிளர்ச்சிப்படை, பிணையாளிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடும்வரை சண்டை நிறுத்தம் தொடங்காது என்று கூறியிருந்தார்.
அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி சண்டை நிறுத்தம் சரியான நேரத்திற்கு ஆரம்பிக்கவில்லை.
தாமதத்தின்போது இஸ்ரேல் காஸாவைத் தாக்கியது.
அதில் 8 பேர் இறந்தனர்.
பெயர்ப் பட்டியலைக் கொடுப்பதில் தொழில்நுட்பச் சிக்கல் இருந்ததாக ஹமாஸ் முன்னர் தெரிவித்திருந்தது.
அதன் பின்னர் ஹமாஸ் அந்தப் பட்டியலை வெளியிட்டது.
இஸ்ரேல் தனக்குப் பட்டியல் கிடைத்ததாக உறுதிசெய்ததும் சண்டை நிறுத்தம் தொடங்கியது.