ஸ்பெயின் கேபில் காரில் சிக்கிக்கொண்ட மக்கள் (Video)
ஸ்பெயினின் ஹியூஸ்கா வட்டாரத்தில் பனி படர்ந்த இடத்தில் கம்பி வடத்தில் (கேபில் காரில்) சென்றவர்கள் நடுவழியில் மாட்டிக்கொண்டனர்.
ஸ்பெயின் – பிரான்ஸ் எல்லையில் அந்த இடம் உள்ளது.
சாகசப் பயணத்தில் எதிர்பாரா இடையூறு ஏற்பட்டது.
பலர் காயமடைந்தனர்.
கம்பி வட நாற்காலிகளில் பலர் சிக்கியிருந்தனர்.
வெளிநாட்டவர் எவரும் பாதிக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை.
மீட்புக் குழு விரைந்து செயல்பட்டது.
காயமடைந்தோர் ஹெலிகாப்டர்களில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கம்பியில் தொங்கியபடி வடத்தில் ஏற்பட்ட கோளாற்றை ஊழியர்கள் சரி செய்தனர்.
கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.