அமெரிக்காவில் TikTok இல்லை… “கொஞ்சம் காத்திருங்கள்”
அமெரிக்கரர்களால் TikTok செயலியைப் பயன்படுத்த முடியவில்லை.
செயலி அமெரிக்காவில் இன்று முதல் தடை செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் ஏகமனதாகத் தீர்ப்பளித்திருந்தது.
அமெரிக்க மக்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் TikTok பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்கர்களில் சிலர் சிறிய வர்த்தகங்கள், இணைய கலாசாரம் ஆகியவற்றுக்கு Tik-Tok செயலியை நம்பி இருக்கின்றனர்.
“அமெரிக்காவில் TikTok செயலி மீதான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு உங்களால் செயலியைப் பயன்படுத்த முடியாது. அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றவுடன் செயலியின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கத் தீர்வு காணவிருப்பதாகக் கூறியிருக்கிறார். தொடர்ந்து இணைந்திருங்கள்” என்று செயலியில் குறிப்பிடப்பட்டிருந்தது.