ரயில்வே ஊடக செய்தித் தொடர்பாளர் , பதவி நீக்கம்!

ரயில்வே துறையின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய ரயில்வே துணைப் பொது மேலாளர் என்.ஜே. இந்திபொல, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்வதில் நடந்த மோசடி குறித்து அவர் தெரிவித்த அறிக்கையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மலையக ரயில் பயணச்சீட்டுகள் எல்லவிற்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டு 42 வினாடிகளுக்குள் விற்றுத் தீர்ந்ததை அடுத்து, பாரிய மோசடி நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து கேட்டபோது, ​​ரயில் டிக்கெட்டுகள் இவ்வளவு விரைவாக விற்கப்பட்டால் அது துறைக்கு சாதகமாக இருக்கும்தானே என ஊடக செய்தித் தொடர்பாளர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அதுவே அவரது பதவி நீக்கப்பட்டதற்கு காரணமாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.