மன்னார் புகையிரதக்கடவை அருகே இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரதக்கடவைக்கு அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இன்று அதிகாலை 4.30 மணிக்கு தலைமன்னார் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.