காஸாவில் சண்டைநிறுத்தம் முழு அளவில் நடப்புக்கு வந்துள்ளது
மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் காஸாவில் சண்டைநிறுத்தம் 15 மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
முதல் கட்டமாக ஹமாஸ் 3 பிணையாளிகளை விடுவித்துள்ளது.அதற்குப் பதிலாக இஸ்ரேல் 90 சிறைக்கைதிகளை விடுதலை செய்திருக்கிறது.
காஸாவில் முழு அளவில் நடப்புக்கு வந்துள்ள சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.
ஹமாஸ் மீது இஸ்ரேல் நெருக்குதலை அதிகரித்தது;
அதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததால் சண்டை நிறுத்தும் சாத்தியமானது என்று அவர் கூறினார்.
இதற்கிடையே இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமார் பென் கவீர் (Itamar Ben-Gvir) சண்டை நிறுத்தத்தால் அமைச்சரவையிலிருந்து விலகியிருக்கிறார்.
இருப்பினும் தமது கட்சி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் (Benjamin Netanyahu) அரசாங்கத்தைக் கவிழ்க்க முற்படாது என்று அவர் கூறினார்.
இந்நிலையில், அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் (Mike Waltz), ஹமாஸ் அமைப்பு காஸாவை ஆளுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.