“எனக்கு வயதாகிவிட்டதா? இளையர்களிடம்தான் கேட்கவேண்டும்” – அனஸ்டாசியா பவ்லியூச்சென்க்கோவா
ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லியூச்சென்க்கோவா (Anastasia Pavlyuchenkova) தமக்கு வயதானாலும்கூட இன்னும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
அவருக்கு வயது 33.
ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டியி்ல் டொன்னா வெகிச்சை (Donna Vekic) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கிறார் அனஸ்டாசியா.
போட்டி முடிந்ததும் அவர் கேமராவைப் பார்த்து அவ்வாறு கூறியிருந்தார்.
“எனக்கு வயதானாலும் நான் போட்டியில் பங்கெடுத்துள்ளேன். காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கிறேன். இளம் பெண்களிடம் நான் ஏன் இன்னும் இங்கிருக்கிறேன், வெற்றி காண்கிறேன் என்பதைப் பற்றிக் கேட்கலாம்,” என்றார் அனஸ்டாசியா.
அனஸ்டாசியா பங்கெடுக்கும் நான்காவது ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டி இது.