டிரம்பின் வருகையால் , Bitcoin நாணயத்தின் மதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது!
அமெரிக்க அதிபராகத் டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில் Bitcoin மின்னிலக்க நாணயத்தின் மதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இன்று அதனுடைய மதிப்பு 109,241 டாலருக்கு உயர்ந்தது.
பிறகு அதன் மிதிப்பு 107,765 டாலருக்குச் சற்று குறைந்தது.
மின்னிலக்க நாணயத் துறையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகத் டிரம்ப் கூறியிருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பிறகு Bitcoin மதிப்பு உயர்ந்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் அதனுடைய மதிப்பு முதல் முறையாக 100,000 டாலரைத் தாண்டியது.
அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தைவிடத் டிரம்ப்பின் நிர்வாகம் மின்னிலக்க நாணயங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.