ஐவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய பைடன்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன்னர் மேலும் ஐவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஐவரும் வன்முறையற்ற குற்றங்களைப் புரிந்தவர்கள்.
அவர்களில் காலஞ்சென்ற சிவில் உரிமைத் தலைவர் மார்க்கஸ் கார்வியும் (Marcus Garvey) அடங்குவார். 1940இல் மாண்ட அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு இடையே முதன்முதலில் பெரிய இயக்கத்தை ஏற்பாடு செய்தவர் என்று கருதப்படுகிறார்.
மேலும் இருவரின் தண்டனைக்காலத்தைத் பைடன் குறைத்திருக்கிறார். அவர்களுக்கு 1990களில் தண்டனை விதிக்கப்பட்டது.
மறுவாழ்வில் அவர்கள் நல்ல முன்னேற்றம் காட்டியதன் அடிப்படையில் அவர்களது தண்டனை குறைக்கப்பட்டது.