மஹிந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற தயாராகிறார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொழும்பு 07, விஜயராமயவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யாவிட்டால், அவர்கள் மாதந்தோறும் ரூ.4.6 மில்லியன் வாடகை செலுத்த வேண்டியிருக்கும் என ஜனாதிபதி அனுர திசாநாயக்க அறிவித்ததை அடுத்து , அவர் பெரும்பாலும் தங்கல்லை, மெதமுலானையில் உள்ள கார்ல்டன் வீட்டிற்கு குடிபெயர்வார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும், இந்த வீடு தனது குடும்பத்தினருக்கோ அல்லது தந்தைக்கோ சொந்தமானது அல்ல, மாறாக அரசாங்கத்திற்கு சொந்தமானது என்றும், இது பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடு என்றும் கூறினார்.
ஆனால் அரசாங்கம் எந்த நேரத்திலும் அறிவிக்கும் போது தனது தந்தை வெளியேறத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.