எழுதி வைத்துக் கொள்ளுங்கள் , அனுரவின் ஆட்சி 10 ஆண்டுகள் நீடிக்கும் : முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆஷு மாரசிங்க
தற்போதைய அரசாங்கம் பத்து முதலீட்டாளர்கள் வந்து நாட்டிற்குள் முதலீடுகளைப் பாதுகாப்பாகக் கொண்டு வர அனுமதித்தால், மேலும் 100 முதலீட்டாளர்கள் பின்தொடர்வார்கள் என முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பான் போன்ற நாடுகள் கூட முந்தைய அரசாங்கம் முதலீட்டாளர்களிடமிருந்து கமிஷன்களைக் கோருவதாகக் குற்றம் சாட்டியுள்ளதாகவும், யாரும் தாங்கள் கடினமாக சம்பாதித்த செல்வத்தை கமிஷன்களாகக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களது அரசியல் சித்தாந்தம் தோற்கடிக்கப்பட்டு விட்டது, தற்போதைய அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் , இதுவரை புதிய அரசாங்கத்தில் எந்த தவறும் நடந்ததாக தாம் காணவில்லை என ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர திசாநாயக்க 2025 ஆம் ஆண்டை வெற்றிகரமாக எதிர்கொண்டு 10 வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டிற்கு கொண்டு வந்தால், அவர் நிச்சயமாக 10 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்வார் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.