வீடுகள் தொடர்பான ஜனாதிபதி சிறப்புரிமைகள் சட்டம் திருத்தப்பட உள்ளது!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் சட்டத்தை அவசரமாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதிகள் தாமாக முன்வந்து வேலைக்கு வந்து பின்னர் வீட்டிற்குச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க பதவி விலகிய பிறகு அரசாங்க வீட்டை எடுக்கவில்லை என்றும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
திசாநாயக்கவும் தனது வீட்டிற்குச் செல்வதாகக் கூறினார்.
ஹேமா பிரேமதாச ஒரு அரசாங்க வீட்டில் கணிசமான காலம் வசித்து வந்ததாகவும், இந்த பிரச்சினை பகிரங்கமான பிறகு அவர் அந்த வீட்டை ஒப்படைத்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகள் தொடர்பாக சித்ரசிறி குழு நியமிக்கப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வீட்டை ஒப்படைத்ததாக ஜனாதிபதி கூறினார்.
வீடுகளை ஒப்படைக்காத மூன்று ஜனாதிபதிகள் இருப்பதாகவும், அந்த மூவரும் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன என்றும் , மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள வீட்டின் நிலம் 13 பேர்ச் என்றும், வீட்டின் பரப்பளவு முப்பத்தாயிரத்து ஐநூறு சதுர அடி என்றும் ஜனாதிபதி கூறினார்.
அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, வீட்டின் மதிப்பு 350 கோடி ரூபாய் , அதன்படி, மதிப்பீட்டுத் துறை அதன் மாத வாடகை 4.6 மில்லியன் என்று கூறியதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மாளிகையை தான் பயன்படுத்தவில்லை என்றாலும், தனது பதவிக் காலத்திற்குப் பிறகு அது அரசாங்கத்திடம் திருப்பித் தரப்படும் என்று கூறிய ஜனாதிபதி, இந்த வீடுகள் எதுவும் அரசாங்கத்திடம் திரும்பக் கொடுக்கப்படாது இருந்துள்ளது என்றும் , இந்த வீட்டை அவரது வாழ்நாள் முழுவதும், அவரது மனைவியின் வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டுமா என்றும் ஜனாதிபதி திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.