ஒரு ஆளுநர் மொத்தமாக தேங்காய்களை வாங்கி ஏற்றுமதி செய்வதால்தான் தேங்காய் தட்டுப்பாடு..
தற்போது இந்த நாட்டில் உள்ள ஒரு ஆளுநர் அதிக அளவில் தேங்காய்களை வாங்கி ஏற்றுமதி செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சாட்டுகிறது.
இந்த நேரத்தில் இந்த தேங்காய்களின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தால், தேங்காய் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்று அதன் தலைவர் அசேல சம்பத் கூறுகிறார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தேங்காய் மூலம் நடப்பது இறக்குமதி செய்யப்பட்ட முட்டை பிரச்சனை போல மற்றோர் ஊழல் என்றார் அசேல சம்பத் .