உலகின் நீண்ட ரயில் பாதையில் வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் (Video)

உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, இந்த ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் – ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தி காட்டியது குறிப்பிடத்தக்கது.

சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள், குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டால், வாகனங்களை இயக்க முடியாத சூழல் உண்டாகும். தற்போது, செனாப் பால ரயில்வே திட்டத்தின் மூலம், அவர்களுக்கு மாற்று வழி உருவாகியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.