தலைமன்னாரில் கடலாமை இறைச்சி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

கடல் ஆமையினை இறைச்சியாக்கி விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (28.01) செவ்வாய்கிழமை,
தலைமன்னார் ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வைத்து கடல் ஆமையினை இறைச்சியாக்கி ஒருவர் விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கடற்படையின் உதவியுடன் குறித்த சந்தேக நபரைப் பொலிஸார் காலை 8.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இதன் போது 1 கிலோ 200 கிராம் இறைச்சி கைப்பெற்றப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக நடவடிக்கைக்காக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தலைமன்னார் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.