கடற்படையினரது துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இந்திய மீனவர்களை பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்துள்ளார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.

கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில், பருத்தித்துறை பொலிஸாரிடம் இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளார். குறித்த மீனவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னைய செய்தி :

இந்திய மீனவர்கள் குழு ஒன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடித்து வருவதாகவும், இலங்கையின் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கடற்படை அதிகாரி ஒருவரால் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் நேற்று (27) இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய மீனவர்கள் குழுவை கைது செய்ய முயன்றபோது, ​​ஒரு இந்திய மீனவர் ஒரு கடற்படை அதிகாரியுடன் சண்டையில் ஈடுபட்டதாகவும், அப்போது கடற்படை அதிகாரியின் துப்பாக்கி தானாகவே செயல்படுத்தப்பட்டதாகவும் புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மீனவர்களின் கால்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு காயமடைந்தனர், மேலும் அவர்கள் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் பல நாள் படகு உட்பட அவர்களின் சொத்துக்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.