எந்த சூழ்நிலையிலும் பலத்தை பயன்படுத்த முடியாது… கடற்படை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம்!
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கடலில் இந்திய மீனவர்கள் குழுவை கைது செய்ய முயன்றபோது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக புது தில்லியில் உள்ள இலங்கையின் பொறுப்பு உயர் ஸ்தானிகரை அழைத்து தனது அதிருப்தியை தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே 13 இந்திய மீனவர்களை கைது செய்ய முயன்றபோது இலங்கை கடற்படையினர் நேற்று (28) காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் இரண்டு இந்திய மீனவர்கள் படுகாயமடைந்ததாகவும், மேலும் மூன்று மீனவர்கள் சிறார்களாக இருந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான முறையில், வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்தி, தீர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசாங்கம் எப்போதும் வலியுறுத்தி வருகிறது, மேலும் எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.” “இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான புரிதல் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.” என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.