நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது! (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து சிறப்புப் பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர், ஜனவரி 20, 2025 அன்று இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளை குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி தடுத்தமை காரணமாகவே கைதாகியுள்ளார்.