அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) இன்று (29) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (29) அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட எம்.பி., பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான வழக்கை பிப்ரவரி 3 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் இன்று யாழ்ப்பாணம் காவல்துறையில் அனுராதபுரம் காவல்துறையின் சிறப்புக் குழுவால் கைது செய்யப்பட்டார்.
ரம்பேவ பொலிஸ் பிரிவில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு குற்றவியல் ரீதியாக இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.