மாவை சேனாதிராஜா மரணம் – இயற்கைச் சாவா? அரசியல் அழுத்தமா?
யாழ்ப்பாணம்: இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணத்தில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரின் மரணம் இயற்கையானதல்ல, அதற்குப் பின்னணியில் கொடூரமான உளவியல் அழுத்தம் உள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் என்ன?
🔹 வைத்தியர்கள் கூறுவது: கடுமையான மன அழுத்தம், அதிர்ச்சி அல்லது தாங்க முடியாத ஏக்கம், தலையின் முக்கிய நரம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் செயல்பாடு பாதிக்க காரணமாக இருக்கலாம்.
🔹 மாவையின் குடும்பத்தார் குற்றச்சாட்டு:
மாவையை தலைவர் பதவியில் இருந்து நீக்க காரணமானவர்கள்,
மரணத்திற்கு முன் நாள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட CVK சிவஞானம் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம்,
சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரின் செயல்கள் ஆகியவை மாவையின் உயிரிழப்பிற்கு வழிவகுத்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
📌 மாவையின் மரணத்திற்குப் பின்னணி விவகாரம்:
தமிழரசுக்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சி
முன்னணி கட்சித் தலைவர்களுடன் கடுமையான மோதல்
அதிக மன அழுத்தத்தால் சுயநினைவு இழந்து வீழ்ந்தது
மரணத்திற்கு காரணமானவர்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும்
மாவை மரணத்திற்கும், அரசியல் குழப்பத்திற்கும் உள்ள தொடர்பு?
மாவையை தமிழரசுக் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க சுமந்திரன் வழிகாட்டலில் சில முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சம்பவம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 26.01.2025 அன்று அவரது வீட்டிற்கு CVK சிவஞானம் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் சென்று, மாவையை கட்சியில் இருந்து விரட்ட திட்டமிட்டு கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் மாவை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔴 மாவையின் மரணத்திற்கு இவர்களது தாக்கம் என்ன?”
மாவையின் மரணத்திற்குப் பின்னணி 19 அரசியல்வாதிகள் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
குடும்பத்தினர் அவர்களின் புகைப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
பீற்றர் இளம் செழியன்-முல்லைத்தீவு
திருமதி சாந்தி சிறிஷ்கந்தராசா முல்லைத்தீவு.
தி. பரம்சோதி.மன்னார்.
நா.சேனாதிராசா-வவுனியா.
சீ.வி.கே. சிவஞானம்- நல்லூர்.
கேசவன் சயந்தன்-சாவகச்சேரி.
இ. சாணக்கியன்- மட்டக்களப்பு.
ப.சத்தியலிங்கம்-வவுனியா.
கி.துரைராசசிங்கம்-மட்டக்களப்பு.
தி.சரவணபவன்-மட்டக்களப்பு.
கி.சேயோன்-சந்திவெளி.
த.கலையரசன்-அம்பாறை.
மு.கண்ணதாசன்-அம்பாறை.
திருமதி ரஞ்சினி கனகராசா-மட்டக்களப்பு.
ச.இரத்தினவேல்-வெள்ளவத்தை.
எம். ஏ. சுமந்திரன்-யாழ்ப்பாணம்.
ப.கமலேஷ்வரன்-முல்லைத்தீவு.
க.செல்வராசா. வன்னி.
சூ.சேவியர் குலநாயகம்.
மாவையின் இறுதி நிகழ்வில், இவர்களில் எவரும் கலந்து கொள்ள முடியாது என்று அன்னாரின் குடும்பத்தினர் கண்டிப்பாக தெரிவித்துள்ளனர்.
மாவை சேனாதிராஜாவின் மரணம் – ஒரு சாதாரண உயிரிழப்பு அல்ல, அதற்குப் பின்னணியில் அரசியல் குற்றச்சாட்டு உள்ளதா?
மக்கள் தீர்ப்பு என்ன?