யோஷித ராஜபக்‌ஸவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாக அமைச்சு அறிவிப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸவின் மகன் யோஷித ராஜபக்‌ஸவிடமிருந்த ஒன்பது துப்பாக்கிகளில், ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில், நூற்று எண்பத்தி இரண்டு துப்பாக்கிகள் மட்டுமே பெறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்‌ஸவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும், அவை இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.