பராசக்தி என்ற டைட்டிலுக்கு யார் சொந்தக்காரர்?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக காணப்படும் விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள 25ஆவது படத்திற்கான டைட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு படங்களின் பெயர்களும் ஒரே பெயராக இருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

விஜய் ஆண்டனி தனது 25வது படத்தை தானே தயாரித்து இசையமைத்து நடிக்கவும் செய்கிறார். இதனை அருண்பிரபு இயக்குகின்றார்.

இந்தப் படத்திற்கு தமிழில் ‘சக்தி திருமகன்’ எனவும் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளில் ‘பராசக்தி’ எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த படத்தின் டைட்டில் வெளியான போது பலரும் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தின் டைட்டிலை அறிந்து கொண்டுதான் விஜய் ஆண்டனி இவ்வாறு தனது படத்திற்கு பெயர் வைத்துள்ளார் என விமர்சனங்களை முன்வைத்தனர்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள 25 ஆவது படத்தின் டைட்டில் ‘பராசக்தி’ என ஏற்கனவே உலா வந்தது. இந்த படத்தின் டைட்டில் சிவாஜி தமிழ் சினிமாவில் அறிமுகமான படமான பராசக்தி படத்தின் டைட்டில் தான் என அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘பராசக்தி’ என்ற தனது படத்தின் தலைப்பை கடந்த ஆண்டு பதிவு செய்து விட்டதாக விஜய் ஆண்டனி ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது பராசக்தி என்ற டைட்டிலுக்கு யார் சொந்தக்காரர் ஆகப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.