யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – ஜனாதிபதி அனுர தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தைகள்!
யாழ்ப்பாணத்தில் இன்று (ஜனவரி 31) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மற்றும் ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் பற்றிய முக்கியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
கடுமையாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், மூன்று இராணுவப் பிரிவுகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி வருகையையொட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பிறகு, ஜனாதிபதி அனுர வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராய உள்ளார் என்றும், பல்வேறு பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.