மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு 3வது நபர் பலி!

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

36 வயது டாக்ஸி ஒட்டுநராக இருந்தவர் கடந்த ஜன.21ல் பிம்ப்ரி சின்ச்வாட்டில உளள யஷ்வந்த்ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு நிமோனியா தாக்கத்தினால், சுவாச பிரச்னை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் ஜனவரி 22ல் அவருக்கு ஜிபிஎஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இறப்புக்கான காரணம் அதிகப்படியான சுவாசக் கோளாறு இருந்ததே என மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருடன் மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை மூன்றை எட்டியுள்ளது.

முன்னதாக புணேவைச் சேர்ந்த 56 வயது பெண் மற்றும் சோலாப்பூரைச் சேர்ந்த 40 வயது நபர் உயிரிழந்தனர். ஜிபிஎஸ் திடீர் உணர்வின்மை, தசை பலவீனத்தை ஏற்படுத்தும். கை கால்களில் கடுமையான பலவீனம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

மாநிலத்தில் பெரும்பாலான வழக்குகள் புஷே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவையாகும். சமீபத்திய வழக்கு உள்பட இந்த தொற்றுகள் மாசுபட்ட நீர் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. .

மாசுபட்ட உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி என்ற பாக்டீரியாவே இந்த தொற்றுநோய்க்கான காரணம் என்று நம்பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.