ஹமாஸ் இராணுவத் தலைவர் மொஹம்மத் டெய்ஃப் உயிரிழந்தது உறுதி.
2023 அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலில் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவராக டெய்ஃப் இருந்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி, டெய்ஃஃவை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.
அவர் காசாவில் நடந்த ஒரு விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஹமாஸின் மூத்த தளபதிகளில் ஒருவரான ரஃபா சலாமாவும் டெய்ஃஃவுடன் சேர்ந்து உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
2002ஆம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவராக டெய்ஃஃ தெரிவாகியிருந்தார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர் இஸ்ரேல் தேடும் முக்கிய குற்றவாளிகளின் பட்டியலில் இருந்துள்ளார்.
2015 முதல் அவர் அமெரிக்காவின் உலகளாவிய தீவிரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.