அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து: கட்டுப்பாட்டு நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான போது, ரோனல்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தின் ஆகாயப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் போதிய ஊழியர்கள் பணியில் இருக்கவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கத்தை விட குறைவான ஊழியர்களே அப்போது பணியில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என New York Times நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
சாதாரணமாக இருவராகவே செய்ய வேண்டிய வழிகாட்டும் பணியை ஒரே ஒரு ஊழியர் தான் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஹெலிகாப்டர்களுக்கும், விமானங்களுக்குமான வழிகாட்டுதல்களை ஒரே நபர் மேற்கொண்டிருந்தார், இதனால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்திற்கான முழு காரணத்தைக் கண்டுபிடிக்க சில காலம் ஆகும் என்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.