உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் பிரபலமான மோனாலிசாவுக்கு திரைப்பட வாய்ப்பு.

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் பிரபலமான மோனாலிசா என்ற பெண் திரைப்படத்தில் நடிக்கிறார்.

16 வயது மோனாலிசா ‘The Diary of Manipur’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக Hindustan Times இணையத்தளம் கூறுகிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனாலிசா அப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

சனோஜ் மிஸ்ரா (Sanoj Mishra) என்பவர் அந்தப் படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தகவல்களைத் திரைப்பட இயக்குநர் தமது Instagramஇல் பகிர்ந்துள்ளார்.

இந்தூர் (Indore) நகரைச் சேர்ந்த மோனாலிசா கும்பமேளாவில்
ருத்ராட்ச மாலைகளை விற்றுக்கொண்டிருந்தபோது பிரபலமானார்.

அவரது அழகிய விழிகளையும் புன்சிரிப்பையும் காட்டும் படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.